நடிகர் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், ரசிகர்களால் கொண்டாடப்படும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்தே படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் தான் முடிந்துள்ளது.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது, மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் நடிகர் ரஜினிகாந்தின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் ரூ. 400 கோடி இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், திரை வட்டாரங்களில் பெரிதும் கூறப்படுவது இது தான்.