அலட்சியமாக ஒரே சமயத்தில் இருமுறை தடுப்பூசி போடப்பட்ட பெண்!

மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு ஒரு நேரத்தில் 2 கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில், விதிஷாவில் கஞ்ச் பசோதா பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 33 வயது பெண் அர்ச்சனா அஹிர்வார், தடுப்பூசி மையத்தில் வேறொருவருடன் பேசியபடி முதல் டோஸை பெற்றுள்ளார். அவர் தனது இருக்கையிலிருந்து எழுவதற்குள், அதே செவிலியர் அப்பெண்ணுக்கு இரண்டாவது முறையாக தடுப்பூசி செலுத்தியுள்ளார்.

முதல் ஊசி செலுத்தப்பட்ட இடத்திலேயே மீண்டும் வலி ஏற்பட்டதால், அர்ச்சனா திரும்பி பார்க்கும் நேரத்தில் இரண்டாவ்து ஊசியும் முழுமையாக போடப்பட்டுவிட்டது. ஒரு நிமிட இடைவெளிக்குள் இது நடந்து முடிந்துவிட்டது.

பயத்தில் அர்ச்சனா கத்த ஆரம்பித்துள்ளார். அவரிடம் விவரத்தைக் கேட்டு அறிந்த கும்பத்தினர், முரட்டுத்தனமாக நடந்துக்கொண்டு, தடுப்பூசி மையத்தை ரணகளப்படுத்தியதாக கூறப்படுகிறது.

பிறகு அர்ச்சனாவின் குடும்பத்தினர், மருத்துவமனை பொறுப்பாளர்களிடமும், சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேத்திடமும் எழுத்துப் பூர்வாமாக புகார் கொடுத்தனர்.

இந்த விஷயத்தின் தீவிரத்தன்மையைக் கண்ட மாவட்ட நோய்த்தடுப்பு அதிகாரி, சம்பவம் நடத்த தடுப்பூசி மையத்துக்கு சென்றார். பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலையை தெரிந்துகொள்ள அவரது வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளார்.