நிவாரண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை கடுமையாகத் தாக்கிய பொதுமக்கள்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்களை சிதைத்து கட்சி அரசியலுக்குள் முடக்கி கட்சி லாபம் தேடிவந்துள்ளார் என குற்றம்சாட்டி பெண் ஒருவரை பொதுமக்கள் கடுமையாகத் தாக்குதலுக்கு உள்ளகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஜெகதீஸ்வரன் சற்குணேஸ்வரி மீதே நேற்றைய தினம் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

வடமராட்சி கிழக்கு பகுதியில் நிவாரண மோசடியில் ஈடுபட்ட குறித்த பெண்மணி மீது அப்பகுதி மக்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளார்.

தற்போது நாட்டிலுள்ள கொரோனா தொற்றினால் வடமராட்சி கிழக்கில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புலம்பெயர் மக்களை ஏமாற்றி தமது கட்சி முகவர்களுக்கு திரும்ப திரும்ப நிவாரணம் வழங்கி வந்துள்ளார் என என கூறியே அவர் மீது பொதுமக்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அப்பகுதியில் தொடர்ந்தும் மோசடியில் ஈடுபடும் இன்னும் ஒரு நபர் மீதும் தாக்குதல் நடத்த இருப்பதாக அப்பகு சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரித்துள்ளார்.