அதிரடியாக ஹேமாவை காப்பாற்றிய கண்ணம்மா, ஆனால்?- பாரதி கண்ணம்மா சீரியலின் அடுத்த பரபரப்பு வீடியோ

விஜய்யின் தொலைக்காட்சியில் பெண்களை மையப்படுத்தி இதுவரை நிறைய சீரியல்கள் வந்துள்ளது. இப்போது ஓடிக் கொண்டிருக்கும் அப்படியொரு சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா.

கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் போராட்டத்தை பற்றி சீரியல் பேசுகிறது.

கதையில் பாரதி தனது மகள் ஹேமாவை மிஸ் செய்ய, கண்ணம்மா தான் காரணம் என போலீஸில் புகார் அளிக்கிறார். ஆனால் கண்ணம்மாவை அவரது மாமியார் வெளியே எடுக்கிறார்.

வெளியே வந்த கண்ணம்மா தெரு தெருவாக ஹேமாவை தேடி அலைகிறார், ஒருவழியாக கண்டுபிடித்து அந்த குழந்தையை அதிரடியாக காப்பாற்றுகிறார்.

காப்பாற்றி விட்டோம் என சந்தோஷப்படுவதற்குள் ஹேமாவின் உடல்நிலை மோசமாகிறது. இந்த பரபரப்பு புரொமோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.