தமிழகத்தில் இன்று 5000 கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கும்கீழாக குறைந்ததுள்ளது

இன்று தமிழகத்தில் 4,804 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று மட்டும் 6,553 பேர் குணமடைந்துள்ளனர், இன்று மட்டும்98 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் சுமார் 1.60 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன; 40,954 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்