இங்கிலாந்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா….

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஊரடங்கு தளர்வுகளை மேலும் ஒரு மாதத்திற்கு இங்கிலாந்து அரசு தள்ளிவைத்துள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22,868 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 47.55 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரசால் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,28,103 ஆக உள்ளது.

மேலும் கொரோனாவில் இருந்து 43.19 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.