திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த இளம் பெண்ணை மைத்துனர்கள் சீரழித்த கொடூரம்!

இந்தியாவில் திருமணம் முடிந்த 20 வயது இளம் பெண், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

உத்திரப்பிரதேச மாநிலம் Kotwali Sahaswan பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பெண், Zarifnaga காவல்நிலையத்திற்குட்பட்ட, Usmanpur பகுதியைச் சேர்ந்த நபரை கடந்த 22-ஆம் திகதி திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த அந்த பெண்ணை, மாமியார் மற்றும் மைத்துனர்கள் வரதட்சனை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில், மைத்துனர்கள் குறித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வது, அவரது தனிப்பட்ட பாகங்களில் சூடு வைத்து கொடுமை செய்வது என வெறிச் செயல்களில் இறங்கியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, குளிர்பானத்தில் விஷம் வைத்து கொடுத்து, கொலை செய்யவும் முயன்றுள்ளனர். இதனால் அப்பெண் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள உடனடியாக இது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்க, உடனடியாக அவர் அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த வந்த பொலிசார், விசாரணை மேற்கொண்டதில் நடந்தது எல்லாம் உண்மை தான் என்பது தெரியவந்ததால், இந்த சம்பவம் தொடர்பாக மாமியார், மைத்துனர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.