நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்.நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

நேற்றுமுன்தினம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்றுமுதினம் இரவு பெண் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் நேற்றய தினம் 34 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதன்போது மேலும் 4 பொலிஸாருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பொறுப்பதிகாரி உட்பட 6 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.