ராஷ்மிகா மந்தனாவின் உருக்கமான Tweet !

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.


கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. இவர்தான் விஜய்யின் அடுத்த கதாநாயகி என்று கூட சொல்கிறார்கள். தற்போது இவர் கார்த்தியுடன் சுல்தான் படம் மூலமாக தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

இந்தநிலையில், சில நாட்களுக்கு முன் பஸ் வசதி இல்லாததால் ஆந்திரா வரை இவரை பார்க்க ரசிகர்கள் நடந்தே சென்று உள்ளார்கள். ஆனாலும் இவரை பார்க்க முடியவில்லை. இதைக் கேள்விப்பட்ட ராஷ்மிகா ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், “என்னை பார்ப்பதற்காக நெடுந்தூரம் நடந்து வந்ததாக கேள்விப்பட்டேன். பிளீஸ் தயவு செஞ்சு இப்படி பண்ணாதிங்க நான் கண்டிப்பாக உங்களை பார்ப்பேன். உங்கள் அன்பை மட்டும் எனக்கு வீட்டிலிருந்தபடியே கொடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.