மேலும் சில நாடுகளுக்கு தடைவித்த இலங்கை…!

மத்திய கிழக்கின் ஆறு நாடுகளிலிருந்து ஸ்ரீலங்காவுக்கு வரும் பயணிகளுக்கு ஜூலை 1 முதல் தடைவிதிக்கப்படவுள்ளது என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் ஜூலை 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிருந்து வரும் பயணிகள் ஸ்ரீலங்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஸ்ரீலங்கா திரும்ப விரும்பும் பயணிகளை பாதிக்கும். இதற்கிடையில் ஆபிரிக்க கண்டத்தின் எட்டு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் ஸ்ரீலங்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.