யாழ்ப்பாணத்தில் சீனப் பிரஜைகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கியமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சீனப் பிரஜையொருவர் பணியாற்றும் புகைப்படமொன்றை சுமந்திரன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
சீன உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் சீனப் பிரஜைகள் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.