சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டு நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு அதனை கௌரவிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் புதிய நாணயக்குற்றிகளை வெளியிடவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
வெளிநாடொன்றின் கட்சியை கௌரவப்படுத்தும் வகையில் இலங்கையில் நாணயக்குற்றிகள் வெளியிடப்படவுள்ளமை இதுவே முதல் முறையாகும்.
இலங்கையில் சீனாவின் செயற்பாடுகள் அதிகரித்துச் செல்வதாக பலதரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் அந்த நாட்டின் கட்சிக்காக இலங்கை அரசாங்கம் நாணயக்குற்றிகளை வெளியிட முன்வந்துள்ளமை மேலும் அதிருப்தியை உருவாக்குமென தெரிவிக்கப்படுவதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.