தமிழ் சினிமாவில் காமெடி மன்னனாக வலம் வருபவர் வடிவேலு. ஆனால் சமீப காலமாக வடிவேலு எந்த ஒரு படத்திலும் நடிக்க முடியவில்லை.
இவர் நடித்த வின்னர், சந்திரமுகி, நகரம், நகரம் 2, போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்து உள்ளார்.
இவர் காமெடியனாக மட்டுமல்லாமல் சினிமா உலகில் ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்து படத்தை மிகப்பெரிய அளவில் படத்தை எடுத்துச் சென்று என்றே கூறவேண்டும்.
மேலும் அப்படங்கள் வசூல் சாதனையும் செய்தது. இப்படி சினிமா உலகில் சிறப்பாக வந்துகொண்டிருந்த வடிவேலு சமீப காலமாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார்.
இருப்பினும் ரசிகர்கள் யாரையாவது கலாய்க்கவோ அல்லது மீம்ஸ் போடுவதற்கு மிகவும் பயன்படுவது வடிவேலு காமெடி தான் தற்போது அவர்தான் மீம்ஸ் கடவுள் போல இருந்து வருகிறார் ஏதோ ஒரு ரூபத்தில் மக்களை தற்போது வரையிலும் சிரிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்.
காமெடியின் மூலம் பல வெற்றி படங்களை கொடுத்து நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனால் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று நாம் அனைவரும் அறியாத ஒன்றாக இருந்து வருகிறது இந்த நிலையில் அவரது சொத்து மதிப்பு பற்றிய செய்தியை நாம் பார்க்க உள்ளோம்.
வைகைப்புயல் வடிவேலு ஒரு படத்திற்காக சுமார் 3 கோடி வாங்குகிறார் அப்படி பார்க்கும் போது இவரின் சொத்து மதிப்பு சுமார் 120 கோடிக்கு மேல் இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது.