சாக்லேட் பாய் ஹரிஷ் கல்யாண் பிறந்த நாள் ஸ்பெஷல்.!

ஹரிஷ் கல்யாண் தமிழ் படங்களில் நடித்துள்ளார். அவர் ஒரு சில தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். பொறியாளன், வில் அம்பு மற்றும் பியார் பிரேமா காதல் ஆகிய படங்களில் நடித்ததற்காக ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டார்.

2017 ஆம் ஆண்டில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஹரிஷ் கல்யாண் கலந்து கொண்டார். அவர் 53 வது நாளில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நிகழ்ச்சியில் நுழைந்தார்.

அதன்பின் அவர் இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் படத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்தார்.இந்த படம் பியார் பிரேமா காதல் படத்திற்கு முற்றிலும் தலைகீழாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் பாரதியுடன் அவரது தனுசு ராசி நேயர்களே என்ற திரைப்படம் நகைச்சுவையாக இருந்தது.

நடிகர் ஹரீஷ் கல்யாண் 2K கிஸ்ட்களின் சாக்லேட் பாயாக வலம் வருகிறார். பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த இவரை பார்க்கும்போது பக்கத்து வீட்டு பையன் போலவே அவரது முகம் மிகவும் பரிச்சயமாக இருப்பதாக ரசிகைகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் இன்று சாக்லேட் பாய் ஹரிஷ் தன்னுடைய 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

நன்றி தெரிவித்து அவர் வெளியிட்ட வீடியோவில் இன்று மாலை 6 மணியளவில் அவர், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிப்பதாக கூறியுள்ளார்.அதற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Harish Kalyan (@iamharishkalyan)