கொரலி வித்தை காட்டி நெட்டிசன்களிடம் ஆபாசமாக திட்டு வாங்கிய சாக்ஷி.!

சாக்ஷி அகர்வால் இந்திய திரைப்படங்களில் நடிக்கும் நடிகை ஆவார், இவர் தமிழ் மட்டும் அல்லாது மலையாள திரைப்படங்களிலும் பல துணை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றார். மேலும், சாக்ஷி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து இருக்கின்றார்.

ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் நடித்து 2018-ம் ஆண்டில் தமிழ் திரையுலகில் புகழ்பெற்றார். அதற்கு முன்பே பல படங்களில் சாக்ஷி நடித்து இருந்தாலும் அப்பொழுது தான் கவனிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் சாக்ஷி நடித்து இருந்தார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று இன்னும் பிரபலமானார். இத்தகைய சூழலில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.