நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, யோகிபாபு, நடிகைகள் ஜோதிகா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சிம்ரன் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு மற்றவர்களையும் தடுப்பூசி போடும்படி வற்புறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்த புகைப்படத்தை விரைவில் அவர் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.