இளைஞர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பெற்ற மகளை பலருக்கும் விருந்தாக்கிய தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசிக்கும் தந்தை ஒருவர் தனது 15 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். இவரது தாயும் மற்றொரு சகோதரியும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான தந்தை வெறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்பு குறித்த 15 வயது பெண்ணிற்கு தந்தையாலும், சித்தியாலும் கொடுமை அதிகமாகியுள்ளது.
மேலும் திருவிழாவில் நடனமாடும் கும்பலுடன் நடனமாட அனுப்பி வைத்ததோடு, அவர்களிடம் 5000 முதல் 8000 வரை பணத்தினை வாங்கிக் கொண்டுள்ளார்.
அப்போது குறித்த திருவிழாவில் நான்கு வாலிபர்கள் பெண்ணை வன்கொடுமை செய்ததோடு, குறித்த சிறுமியும் கர்ப்பமாகியுள்ளார்.
இந்த விடயத்தினை தனது தந்தையிடமோ, தாய் மற்றும் சகோதரியிடமோ சொல்லாமல் மறைத்து வந்துள்ளார்.
மேலும் சிறுமியின் சகோதரியைக் கூட பார்க்விடாமல் அடைத்து வைத்த நிலையில், அங்கிருந்து தப்பித்து தனது தாய் மற்றும் சகோதரியிடம் சேர்ந்து நடந்த உண்மையினைக் கூறியுள்ளார்.
மேலும் தன்னை தனது தந்தை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்நிலையில் தனது தங்கையை அழைத்துக்கொண்டு சகோதரி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளதையடுத்து, அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.