கல்கிசையில் 15 வயதுடைய மகளை இணையத்தளம் ஊடாக பல்வேறு பாலியல் நடவடிக்கைக்காக விற்பனை செய்த தாய் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த நபர்களுக்குள் சிறுமியின் தாய் மற்றும் மேலும் சில பாலியல் நடவடிக்கைகளுக்கு பெண்களை அழைத்து சென்ற முச்சக்கர வண்டி சாரதி, மோட்டார் வாகன சாரதி, சிறுமியின் புகைப்படத்தை உள்ளடக்கி இணையத்தில் விளம்பரம் தயாரித்த நபர், அவரை பாலியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக் கொண்ட நபர்களும் உள்ளடங்குவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்களுக்குள் காவி உடை அணிந்த ஒருவரும் இருந்தார் என அவர் கூறியுள்ளார். இந்த சிறுமி இணையத்தளம் ஊடாக 10ஆயிரம் முதல் 30ஆயிரம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளார்.
குறைந்தது 3 மாத காலம் அவரை இதற்காக பயன்படுத்தியுள்ளனர். சிறுமியை வாடகை வீடு ஒன்றில் தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதமாக கல்கிசை பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய கடந்த ஜுலை மாதம் 7ஆம் திகதி அந்த வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு 17 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமியை இணையத்தளம் ஊடாக பயன்படுத்திய மேலும் 20 பேரின் தகவல் கிடைத்துள்ள நிலையில் அவர்களும் கைது செய்யப்படவுள்ளார்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.