விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று செந்தூரப்பூவே.
இதில் கதாநாயகனாக நடிகர் ரஞ்ஜீத் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி என்பவர் நடித்து வருகிறார்.
மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் செந்தூர பூவே சீரியலில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் நிகழ்ந்துள்ளது.
ஆம், தனது அம்மாவை பார்க்கவேண்டும் என்று துரை சிங்கத்தின் { ரஞ்ஜீத் } மகள் அடம்பிடிக்க, கதாநாயகி, அவரை ஓவியமாக வரைந்து காட்டியுள்ளார்.
அந்த ஓவியத்தில் நடிகையும், நடிகர் ரஞ்சீத்தின் நிஜ மனைவியுமான பிரியராமனின் முகம் உள்ளது.
நடிகை பிரியராமன் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.