யாழில் கால்பதித்த இந்தியா கடும் கோபத்தில் அமைச்சர்… வெளியான தகவல்!

யாழில் இந்தியா கால்பதித்தது குறித்து ஏன் ஊடகங்கள் கவனம் செலுத்தவில்லை என ஊடகவியலாளர்களை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடிந்துகொண்டுள்ளார்.

இதேவேளை எதிர்க்கட்சியினருக்கே சீனா அச்சுறுத்தலாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் வகையில் இன்று கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சரிடம் சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஏன் நீங்கள் சீனா தொடர்பில் கேள்விகளைக் கேட்கிறீர்கள். இந்தியாவின் தலையீடு இல்லையா என ஏன் நீங்கள் கேட்பதில்லை. யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் தலையீடு குறித்து ஏன் கேட்பதில்லை? இலங்கைக்கு சீனா பிரச்சனையில்லை. எதிர்க்கட்சியினருக்குத் தான் பிரச்சனை.

சீனா தொடர்பில் எதிர்க்கட்சியே கதைத்துக் கொண்டிருக்கின்றது. எங்களுக்கு எந்த நாடு உதவி செய்தாலும் அதனைப் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்யத் தான் நாம் முயற்சிப்போம்.

நேற்றைய தினம் மட்டக்களப்பு விமான நிலையத்தின் அபிவிருத்திக்கு சீனா உதவி செய்யும் என்றால் அதனையும் நாங்கள் பெற்றுக்கொள்ளுவோம் என்றார்.