கிழக்கு மாகாணத்தில் நேற்று (30)வரை 24 மணி நேரத்திற்குள் 177 கொரோனா தொற்றாளர்களும் 02 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே இவ்வாறு தெரிவித்த அவர் கொரோனா தகவல்கள் தொடர்பில் மேலும் தெரிவிப்பதாவது திருகோணமலை மாவட்டத்தில் இரு மரணங்களும் பதிவாகியது.
அதிகளவான மட்டக்களப்பு மாவட்டத்தில் 114 கொரோனா தொற்றாளர்களும், கல்முனை பிராந்தியத்தில் 42 தொற்றாளர்களும், அம்பாறை தெஹியத்த கண்டி பகுதியில் 5 தொற்றாளர்களும்,திருகோணமலையில் 16 தொற்றாளர்களும் இணங்காணப்பட்ட நிலையில் மட்டக்களப்பு சுகாதார சேவைகள் திணைக்கள பகுதியில் மட்டக்களப்பு, காத்தான்குடி, ஆரையம்பதி, ஏறாவூர், ஓட்டமாவடி, கோரளைப்பற்று மத்தி ஆகிய பகுதிகளில் அதிகளவான தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளார்கள்.
கல்முனையில் பரவலாக கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தினால் சொல்லப்பட்ட சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாக கடைப் பிடிக்கவும் மக்கள் பொடுபோக்காக காணப்படுவது கவலையளிக்கிறது.
ஒன்றரை மீற்றர் சமூக இடைவெளி பின்பற்றாமை , முகக்கவசம்அணியாமை தேவையற்ற ஒன்றுகூடல் என்பதை தவிர்க்காமை பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
அனுமதிக்கப்பட்ட கடைகளை திறந்து பொருட்கொள்வனவில் ஈடுபடுகின்ற போது சமூக இடைவெளி பேணப்படாமை , திறக்க அனுமதிக்கப்படாத ஹோட்டல்களை திறத்தல், சமயஸ்தளங்களின் ஒன்று கூடல்,மரண வீடுகள்,திருமண வைபவங்கள் போன்றவற்றை சுகாதார வழிகாட்டல்களுடன் பின்பற்றவும் இல்லாவிட்டால் பாரிய விளைவுகளை எதிர் நோக்க நேரிடும் என்பது கவலைக்குறிய விடயமாகும்.