மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இகத்புரி மலை அருகே உள்ள சொகுசு பங்களாவில் ரகசியமாக போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த பங்களாவில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு அனுமதியின்றி பார்ட்டி நடத்தப்பட்டதும், போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது. அதில் கலந்து கொண்ட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நடிகை ஹீனா பாஞ்சலும் ஒருவர். பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இவர், தமிழில் யாகாவாராயினும் நாகாக்க, கன்னட படமான லொட்டு, தெலுங்கில் மல்லிபு போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பிரபலமானார். நடிகை ஹீனா பாஞ்சல் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.