அட இந்த பொருட்களை எல்லாம் இப்படி வைத்தால்.. நீண்ட நாட்களுக்கு கெட்டுபோகாதாம்!…

பட்டன்காளான்களை உப்பு கலந்த தண்ணீரில் போட்டு ஒரு கொதிவிட்டு எடுத்து, வடிகட்டி ஆற வைத்து காற்று புகாத டப்பாவினுள் வைத்தால் 1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.

அடுத்து, கத்திரிக்காய்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டு ஃபிரிட்ஜினுள் வைக்காமல், நியூஸ் பேப்பரில் சுற்றி வைத்தால் நீண்ட நாள்கள் கெடாமலிருக்கும்.

ஏலக்காய், கிராம்பு மற்றும் மிளகு போன்றவற்றை ஒன்றாக காற்று புகாத ஒரே பாட்டிலில் போட்டு வைத்தால் நீண்ட நாள் களுக்கு கெடாமலிருக்கும்.

மிளகாய்ப் பொடி வைத்துள்ள பாட்டிலில் சிறியதுண்டு பெருங்காயத்தைப் போட்டு வைத்தால் நீண்ட நாள்களுக்குக் கெடாமலிருக்கும் வாசனையும் கூடும்.

உலர்ந்த திராட்சை, பேரீச்சம் பழம் போன்றவற்றை வைத்துள்ள பாட்டில்களில் ஒன்றிரண்டு கிராம்புகளைப் போட்டு வைத்தால் கெடாமலிருக்கும்.

பன்னீரை நீண்ட நாள்களுக்குக் கெடாமல் வைத்திருக்க வினிகர்” தெளித்து பாலித்தீன் பையினுள் போட்டு வைக்கவும்.

பழங்களை ஃப்ரிட்ஜினுள் வைக்கும் போது பாலித்தீன் பையினுள் போட்டு வைக்காமல் திறந்த பாத்திரத்தில் வைத்தால் நீண்ட நாள்களுக்குக் கெடாது.

பொரித்த அப்பளம், சிப்ஸ், பிஸ்கெட்டுகள் போன்றவற்றை பாலித்தீன் பையினுள் போட்டு ஃப்ரிட்ஜினுள் வைத்து விட்டால் நீண்ட நாள்களுக்கு கரகரப்பாகவே இருக்கும்.

பச்சை மிளகாய்களை காம்பு நீக்கிவிட்டு அழுத்தமான பிளாஸ்டிக் கவரில் போட்டு சிறிது துளையிட்டு ஃபிரிட்ஜினுள் வைத்துவிட்டால் ஒரு மாதம் வரை அப்படியே இருக்கும்.

அப்பளம், பப்படம் போன்றவற்றின் மேல் சிறிது மிளகாய் பொடி மற்றும் பெருங்காயத் தூளைத் தூவி வைத்து விட்டால் எறும்புகளோ, வேறு பூச்சிகளோ அண்டாமலிருக்கும்.

புதினாவை நன்றாக அரைத்து சில துளி எலுமிச்சைச் சாறுகலந்து “ஃபிரீசரில்” வைத்திருந்தால் நிறமும் மணமும் நீங்காமல் சில நாள்கள் இருக்கும்.