யாழ்.மாவட்டத்தில் 63 பேர் உட்பட வடக்கில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
யாழ்.போதனா வைத்தியசாலை நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 48 பேருக்கும், யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 39 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் முடிவுகளின் படி யாழ்.மாவட்டத்தில் 24 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும், வவுனியா மாவட்டத்தில் 3 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 பேருக்கும்,
மன்னார் மாவட்டத்தில் 9 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட முடிவுகளின்படி, சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 39 பேருக்கு தொற்று உறுதியானது.