முடக்கப்பட்டது கண்டியின் முக்கிய பகுதி…! வெளியான தகவல்!

கண்டி மாவட்டத்தில் முக்கிய பகுதியான கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாகராதெனிய பகுதி இன்று (04) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதேவேளை கண்டி மாவட்டம் கொரோனா தொற்றுக்களின் அபாயவலயமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.