தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஜூலை மாதம் 12 ஆம் தேதி வரை ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் நடந்து வருகிறது.
தமிழகத்தில் இன்று (கடந்த 24 மணிநேரத்தில்) ஒரேநாளில் 4,013 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு 24,92,420 ஆக உயர்ந்துள்ளது. இன்று 115 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 32,933 ஆக உயர்ந்துள்ளது. 4,724 பேர் பூரண நலன் பெற்றதை தொடர்ந்து, மொத்த பூரண நலன் பெற்றோரின் எண்ணிக்கை 24,23,606 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் கடந்த 24 மணிநேரத்தில் 227 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,33,224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் மொத்தமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 35 ஆயிரமாக குறைந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 474 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த சில வாரமாக கொரோனா பரவல் உச்சத்தில் இருந்து மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இன்னும் 1 முதல் 2 வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் கீழ் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.