High Quality அதாவது அதிக தெளிவுத்திறன் கொண்ட வீடியோக்களைப் பகிர உங்களை அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய வாட்ஸ்அப் செயல்படுவதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த செய்தியிடல் பயன்பாடு உயர் தெளிவுத்திறன் கொண்ட வீடியோவை நீங்கள் அனுப்பும்போது அதை compress செய்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப்பின் 2.21.14.6 ஆண்ட்ராய்டு பதிப்பில் புதிய அம்சத்தை WaBetaInfo கண்டறிந்தது, மேலும் அதன் ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ளது. நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு உயர்தரமான வீடியோக்களை அனுப்ப புதிய விருப்பங்களைச் சேர்க்க செய்தி தளம் திட்டமிட்டுள்ளது என்பதை இது காட்டுகிறது.
Auto, Best Quality மற்றும் Data Saver உள்ளிட்ட மூன்று விருப்பங்கள் இருக்கும். முதலாவது Auto விருப்பத்தைத் தேர்வு செய்தால் வீடியோக்கள் எப்படி அனுப்ப வேண்டும் என்பதிற் வாட்ஸ்அப் தானாகவே கண்டுபிடிக்கும்.
இரண்டாவது விருப்பத்தை நீங்கள் தேர்வுசெய்தால், வாட்ஸ்அப் வீடியோவில் தரம் மாறாமல் அப்படியே அனுப்பும். டேட்டா சேவர் விருப்பத்தை தேர்வு செய்தால் வீடியோக்களை அனுப்பும் முன் வாட்ஸ்அப் அவற்றை compress செய்து விடும். இந்த அம்சம் உருவாக்கத்தில் உள்ளது, இது எதிர்கால புதுப்பிப்பில் கிடைக்கும். ஆனால், வாட்ஸ்அப் விரைவில் இதை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.