இனிமே அவருக்கு எனக்கும் எந்த உறவுமில்லை – திருமணத்தை நிறுத்திய நடிகை

பாலிவுட் சினிமா நடிகை மெஹ்ரீன் பிர்சாடாவுக்கு, அரசியல் பிரமுகர் பவ்யா பிஷ்னோய்க்கும் திருமணம் நடக்க இருந்த நிலையில் மெஹ்ரீனே திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மாடல் அழகியாகவும், நடிகையாகவும் இருந்து வருபவர் மெஹ்ரீன் பிர்சாடா. இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவருக்கும், தொழில் அதிபரும், அரசியல்வாதியுமான பவ்யா பிஷ்னோய்க்கும் திருமணம் செய்ய சமீபத்தில் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் மூலமாக தகவல் தெரிவித்துள்ள மெஹ்ரீன், தானும், பவ்யா பிஷ்னொயும் திருமண முடிவை முறித்துக் கொண்டுள்ளதாகவும், இருவருமே சேர்ந்தே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இனி தனக்கும் பிஷ்னோய் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ள மெஹ்ரீன் தொடர்ந்து படங்களில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.