தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரம் மூலம் நடித்து பின் கதாநாயகியாக ஜொலித்தவர்கள் மத்தியில் இருந்தவர் நடிகை சரண்யா மோகன். மலையாள நடிகையாக அறிமுகமாகி தனுஷ், நயன் தாராவின் யாரடி நீ மோகினி படத்தில் நயனுக்கு தங்கையாக நடித்திருப்பார்.
நடிகர் விஜய் வேலாயுதம் படத்தில் அவருக்கு செல்ல தங்கையாகவும் நடித்து பிரபலமானார். பின் வெ படத்தின் மூலம் பிரபல நடிகையாக வளம் வந்தவர் சரண்யா மோகன். தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார்.
இதையடுத்து ஜெயம்கொண்டான், பஞ்சாமிருதம், அ ஆ இ ஈ, வெண்ணிலா கபடி குழு, ஈரம், ஆறுமுகம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின், 2015ல் அரவிந்த் கிருஷ்ணன் என்ற பல் மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். 2016ல் ஆண் மகனை பெற்றெடுத்த நடிகை சரண்யா இரண்டாவதாக பெண் குழந்தைக்கு தாயானார்.
தற்போது தனது இரு குழந்தைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலர் ஒல்லியாக இருந்த சரண்யாவா இது என்று கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram