சைக்கிளிங் சென்ற முதல்வருடன் பிரபல நடிகை எடுத்த செல்பி: குவியும் லைக்ஸ்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தனது நண்பர்களுடன் சைக்கிளிங் சென்றார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுவாக சென்னை கடற்கரை சாலை, ஈசிஆர் சாலையில் சைக்கிளிங் மேற்கொள்வதை விடாமல் செய்து வருகிறார்.

தற்போது முதல்வர் ஆன பிறகும், பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் சைக்கிளிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் ஞாயிற்றுகிழமையான இன்று கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்றார் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுக பொலிசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.