தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா. திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தமிழில் கைவசம் காத்துவாக்குல இரண்டு காதல், சகுந்தலம் திரைப்படங்கள் இருக்கின்றன.
தி பேமிலி மென் வெப்சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய விமர்சனங்களை பெற்று வந்தது. தற்போது ஊரடங்கு காலம் என்பதால் சமந்தா தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அத்துடன் உடற்பயிற்சி செய்வது மாடித்தோட்டம் அமைப்பது என்று பலவற்றில் கவனம் செலுத்தி வருகின்றார்.
அவ்வப்போது, சமூக வலைதளங்களில் தனது செயல்பாடுகளை புகைப்படம் எடுத்து பதிவிடுவது வழக்கம். எதிர்பாராத நேரங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுப்பார். தற்போது வெள்ளை நிற உடையில் சமந்தா வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
அதில் அன்னப்பறவை போல இருக்கின்ற சமந்தா தலைப்பாக, “வாழ்க்கையில் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து யோசித்துப் பாருங்கள். நம்மால் இதைச் செய்ய முடியாது என்று நினைத்த விஷயங்கள் அனைத்தையும் நீங்கள் அடைந்திருப்பீர்கள். நீங்கள் அடைந்துள்ள உயரத்தை பாருங்கள். நாம் போராளிகள்.” என்று உற்சாகப்படுத்தும் விதமாக தெரிவித்துள்ளார்.
View this post on Instagram