லவினியாவில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், மருத்துவர் மற்றும் அவரது நண்பர் என இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், சந்தேக நபர்கள் என்ற வகையில் மேலும் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள கொழும்பு பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல மருத்துவமனையில் இதய நிபுணராக 41 வயது மருத்துவர் பணியாற்றி வருகிறார். இவரது 33 வயது நண்பர் அங்குள்ள பந்தரகாமா பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த செய்த காவல் துறையினர், மருத்துவர் மற்றும் அவரது நண்பரை அதிரடியாக கைது சேட்னானார். இவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறுமி பாலியல் தொழிலாளர்கள் போல பயன்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவலும் உறுதியானது.
இதனையடுத்து, சிறுமி மற்றும் மருத்துவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் 34 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுமியை சீரழிக்க உதவி செய்தவர்கள், சிறுமியை வைத்து விபச்சாரம் செய்தவர்கள், அவர்களுக்கு வாகன உதவி செய்தவர்கள், விடுதிகளில் அறைகள் கொடுத்தவர்கள் என 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த கும்பல், சிறுமியின் புகைப்படத்தை பயன்படுத்தி விளம்பரமும் செய்துள்ளது. இதனை விரும்பி பகிர்ந்த சில நபர்களும் கைது செய்யப்பட்டுள்னர் என காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் அதிர்ச்சி திருப்பமாக, மாலத்தீவின் முன்னாள் மாநில நிதியமைச்சர் மொஹமட் அஷ்மாலி மற்றும் மிஹிண்டலே பிரதேசத்தின் துணைத்தலைவர், முன்னணி வைர வியாபாரிடம் காவல்துறையினரின் விசாரணை வலையில் சிக்கி காவல்துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர்.
சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோகத்திற்காக மாலத்தீவின் முன்னாள் மாநில நிதியமைச்சர் மொஹமட் அஷ்மாலி, மிஹிண்டலே பிரதேச சபையின் துணைத் தலைவர் மற்றும் ஒரு முன்னணி ரத்தின வியாபாரி ஆகியோர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விஷயம் தொடர்பான தொடர் விசாரணை நடந்து வருகிறது.