சகோதரன் செய்த காதலுக்காக அவரின் தங்கையை எட்டு பேர் சேர்ந்து பெற்றோரின் கண்முன்னே வன்கொடுமை செய்த கொடுமை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உத்திர பிரதேசத்தில் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகே ஒரு குடும்பத்தில் வசிக்கும் 16 வயதான பெண்ணின் சகோதரர் வேறொரு பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.
குறித்த காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவரவே, காதலனை அழைத்து கண்டித்துள்ளனர். ஆனால் குறித்த வாலிபர் அதனை கண்டுகொள்ளாமல் தனது காதலியோடு எஸ்கேப் ஆகியுள்ளார்.
இதனால் கோபமடைந்த பெண்ணின் சகோதரர்கள் எட்டு பேர் சேர்ந்து, காதலன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அந்த வாலிபர் இல்லாததால் கடுப்பான அவர்கள், காதலனின் தங்கை வீட்டில் இருந்ததை அவதானித்து, அப்பெண்ணை கட்டிலில் துணியால் கட்டி வைத்துள்ளனர்.
பின்பு பெற்றோரின் கண்முன்னே சிறுமியை 8 பேர் சேர்ந்து வன்கொடுமை செய்து பழிதீர்த்துள்ளனர்.
அந்த பெண்ணின் பெற்றோர் அங்குள்ள காவல்நிலையத்தில் சென்று புகார் கொடுத்துள்ளதையடுத்து, தற்போது பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.