மனித பாவனைக்கு உதவாத காலாவதியான மற்றும் லேபல் இடப்படாத பெருமளவு உணவுப் பொருட்கள் மட்டக்களபபு நகரில் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த விடயத்தை மட்டக்களப்பு – கோட்டைமுனை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நகரிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களை சுகாதார அதிகாரிகள் இன்று காலை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது சட்டவிரோதமான முறையில் அங்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பெருமளவிவான பொதி செய்யப்பட்ட மரமுந்திரிகை விதைகள், கோதுமை மா கடலை, பிஸ்கட்டுகள் முற்றும் காலாவதியான போத்தலில் அடைக்கப்பட்ட பானங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அவை மட்டக்களப்பு நீதவான் நீதிமனறத்தில் ஆஜர்படுத்தபபடவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.