இன்று சுவிஸ் பல்கலைக்கழகங்களுக்கான மருத்துவ மாணவர்களுக்கான அனுமதிப்பரீட்சை ( றீட் பரீட்சை) நடைபெற்றது.
சூரிச் Messe பரீட்சை நிலையத்தில் அண்ணளவாக 1500 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். கிட்டத்தட்ட 90க்கு மேற்பட்ட தமிழ் மாணவர்களும் பரீட்சையில் பங்கேற்றனர்.
6 வீதமான மாணவர்கள் தமிழ் மாணவர்களாவர்.
வெறும் 25-30 வருட புலம்பெயர் தமிழ் சமூகத்தின் வாரிசுகள், கல்வியில் சுவிஸ் நாட்டில் சிறந்த வகிபாகத்தினை எதிர்காலத்தில் பெறுவர் என்பது திண்ணம்.
தற்போது வரை 22 தமிழ் வைத்திய நிபுணர்கள் சுவிஸ் வைத்தியசாலைகளில் பணிபுரிகின்றனர்.