பல பெண்களுடன் தொடர்பு.. கணவரை பற்றி சீரியல் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால் விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்ததாக பாவம் கணேசன் சீரியலில் நடிக்கும் நடிகை விலாசினி கூறியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று பாவம் கணேசன். இந்த சீரியலில் கலக்கப்போவது யாரு புகழ் நவீன் நாயகனாக நடித்து வருகிறார்.

இதையடுத்து, இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர்களில் ஒருவர் விலாசினி. இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில், தன்னுடைய கசப்பான திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.

அதில், திருமணத்திற்கு முன்பு வரை என்னுடைய கணவர் எவ்வளவு மோசமானவர் என்பது எனக்குத் தெரியவில்லை.

திருமணத்திற்குப் பின்னர் எனக்கு மட்டுமல்லாமல் என்னுடைய குடும்பத்தாருக்கும் அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். பல பேருடன் இணைந்து மோசடி வேலைகளில் ஈடுபடுகிறார்.

பல பெண்களுடன் உறவில் இருந்து வருகிறார். என்னுடைய உயிருக்கு ஆபத்து என்பதால் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளேன். என்னுடைய வாழ்க்கைக்கு அதுதான் நல்லது என கூறியுள்ளார்.

மேலும், திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து தற்போது தனியாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்த நிம்மதியுடன் தொடர்ந்து வாழ விரும்புவதாக விலாசினி தெரிவித்துள்ளார்.