ஒரு பெண் வைத்தியர் தனது ஹொஸ்ரலில் ஆடை மாற்றும் போது புகைப்படங்களை எடுத்ததாக செய்யப்பட்ட முறைப்பாட்டில் ஆண் வைத்தியரை ராஹம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட வைத்தியர் ராஹம வைத்தியசாலையைச் சேர்ந்தவர் எனவும் கைதுசெய்யப்பட்ட வைத்தியர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரிவதாக கூறப்படுகிறது.
மாலை வேலை மாற்றத்திற்குப் பிறகு அவர் தனது ஆடைகளை மாற்றிக்கொண்டிருந்தபோது அவர் புகைப்படங்களை ஹொஸ்ரலில் எடுத்ததாகக் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராஹம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட மருத்துவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.