இலங்கை அரசு தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பின் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் டுவிட்டர் பதிவு ஒன்றுக்கு மீள் பதிவு செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பின் மனோ கணேசன் இதனை கூறியுள்ளார். அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“புது நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சொல்வது சரி. நாட்டை வளர்க்க சர்வதேச முதலீடுகள் அவசியம்தான். ஆனால் தேவை ஆள் மாற்றம் இல்லை, கொள்கை மாற்றம்.
சர்வதேசத்தை நாட முன் இலங்கை அரசு “போலி தேசியவாதத்தை கைவிட்டு, தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புது நிதியமைச்சர் #பெசில்_ராஜபக்ச சொல்வது சரி. நாட்டை வளர்க்க சர்வதேச முதலீடுகள் அவசியம்தான். ஆனால் தேவை ஆள் மாற்றம் இல்லை, கொள்கை மாற்றம்! சர்வதேசத்தை நாட முன் #இலங்கையரசு, "போலி தேசியவாத"த்தை கைவிட்டு, தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். pic.twitter.com/a38SJnTovV
— Mano Ganesan (@ManoGanesan) July 16, 2021