நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் ஜகமே தந்திரம் படம் வெளிவந்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. தொடர்ந்து நடிகர் தனுஷ், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் இந்தியில் நடித்து வரும் அத்ரங்கி ரே என்ற படமும் இந்த ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் தனுஷை டுவிட்டர் சமூக வலைதளத்தில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது. இதனால் நடிகர் தனுஷ், தமிழ் திரைப்பட உலகில் 1 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர கூடிய முதல் பிரபலம் ஆகியுள்ளார்.