தாக்குதலில் இருந்து 10- வயது சிறுமியை துணிச்சலாக காப்பாற்றிய நாய்

ஸ்கார்பாரோவில் ஓநாயிடம் இருந்து 10 வயது சிறுமியை துணிச்சலாக காப்பாற்றிய வளர்ப்பு நாயை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை காலை வார்டன் அவென்யூ அருகே இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின் போது தனது செல்ல நாய் மேசியுடன் தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்தார் 10 வயதான சிறுமி Lily Kwan.

அப்போது அங்கே ஒரு ஓநாயை அவர் பார்த்துள்ளார். என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப் போன சிறுமி, அடுத்த இரை தாம் தான் என கருதியுள்ளார்.

சிறுமியையும் நாயையும் கண்ணில் பட்டதும், ஓநாய் மெதுவாக இவர்களை நெருங்கியுள்ளது. அதே வேளை சிறுமி தனது பிடியில் இருந்து நாயை விடுவித்துள்ளார்.

அடுத்த நொடி, சிறுமி தமது குடியிருப்பு தேடி ஓட்டமெடுக்க, அவரை துரத்தியபடி நாய் ஓட, இவர்கள் இருவரையும் துரத்திக் கொண்டு ஓநாயும் விரைந்துள்ளது.

மட்டுமின்றி, அந்த ஓநாய் அப்போது நாயை தாக்க தொடங்கியது. இதை கவனித்த சிறுமி துரிதமாக முடிவெடுத்து, குடியிருப்பு ஒன்றில் உதவி கோரியுள்ளார்.

அங்கிருந்த குடியிருப்புவாசிகள் ஓநாயை துரத்தியதுடன், சிறுமியையும் நாயையும் காப்பாற்றியுள்ளனர். நாய் மட்டும் அந்த நேரத்தில் தம்முடன் இல்லை என்றால் ஓநாயிடம் சிக்கியிருப்பேன் என கூறியுள்ள சிறுமி, தம்மை காப்பாற்றியது செல்ல நாய் மேசி தான் என்றார்.