ரொறன்ரோவில் குயின்ஸ் பார்க் பகுதியில் மாஸ்க் அணிந்திருந்த பெண்மணியை ஆண்கள் கும்பல் ஒன்று புகைப்படம் எடுத்து மிரட்டியுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
குயின்ஸ் பார்க் பகுதியில் மே மாதம் 22ம் திகதி சுமார் 7.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தற்போது கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருந்த புகைப்படத்தை வெளியிட்டு, பொதுமக்களின் உதவியை ரொறன்ரோ பொலிசார் கோரியுள்ளனர்.
சம்பவத்தின் போது 41 வயதான அந்த பெண்மணியின் முகத்தில் இருந்து மாஸ்கை அப்புறப்படுத்த அந்த கும்பல் முயன்றுள்ளது. மட்டுமின்றி கும்பல் சேர்ந்து வலுக்கட்டாயமாக அவரிடம் இருந்து மாஸ்கை பறிக்க முயன்றுள்ளனர்.
மேலும், காலியான பீர் டப்பாக்களை குறித்த பெண்மணி மீது வீசியதுடன், அவரது புகைப்படத்தை பதிவு செய்து மிரட்டியும் உள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிந்துள்ள பொலிசார், தற்போது பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். தகவல் தெரியவரும் பொதுமக்கள் ரொறன்ரோ பொலிசாருக்கு உதவ கேட்டுக்கொண்டுள்ளனர்.