இஷாலினி தொடர்பாக சஜித்தின் அதிரடி நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி பற்றிய விசாரணைகள் விரைந்து நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.

அத்துடன் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்கப்பட வேண்டுமெனவும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், இந்த சம்பவத்தை சிலர் அரசியல்மயப்படுத்த முயற்சிப்பதாகவும், அதற்கு இடமளிக்காத வகையில் தரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.