சிம்ரன் திரிஷா நயன்தாரா அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது பசங்களின் லேட்டஸ்ட் கிரஷ் யார் தெரியுமா…? மலையாளத்தில் முன்னணி நடிகையும் கர்ணன் படத்தின் கதாநாயகியுமான ரஜிஷா விஜயன் தான். இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.
கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார். ரஜிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், “பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது கர்ணன் படத்திற்கான வாய்ப்பு வந்து கதை கேட்டேன். கேட்டதுமே, கதை மிகவும் பிடித்துவிட்டது.
கர்ணன் படத்திற்கு அந்த ஊர்கார பெண்ணாக நடிப்பதற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன். அதனால் அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன்” என்றார்.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ” பிரம்மன் படைத்ததில் பிரம்மாண்ட படைப்பு நீங்கதான்…” என்று சகட்டு மேனிக்கு Ice வைக்கிறார்கள்.