நடிகை வனிதாவை பற்றி அடிக்கடி ஏதாவது ஒரு விஷயம் வெளியாகி கொண்டே தான் இருக்கிறது.
அந்த வகையில், வனிதாவுக்கு 4வது திருமணம் நடக்கும் என்று ஜோதிடர் ஒருவர் தெரிவித்த செய்தி தான் வைரலாகி வந்தது.
இதையடுத்து, தான் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும், கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டார் வனிதா. அதை பார்த்தவர்கள் வனிதாவுக்கு 4வது திருமணம் நடந்துவிட்டது, பவர் தான் கணவர் என்று பேசத் துவங்கிவிட்டனர்.
மேலும் வனிதாவும், பவர்ஸ்டாரும் கன்னத்தோடு கன்னம் வைத்து சிரித்த முகமாக போஸ் கொடுத்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் கேளியும் கிண்டலுக்கும் ஆளாகியிருந்தது.
அந்த புகைப்படத்தை ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டு வனிதா விஜயகுமார் மற்றும் நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரை மென்ஷன் செய்து கூறியதாவது, எபிக், ஒரிஜினல் கேரக்டர். அக்காவுக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கிறது.
குடும்பங்களை எப்படி மெயின்டெய்ன் செய்ய வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் என்றார். அந்த ட்வீட்டை பார்த்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சிரித்து கண்களில் நீர் வரும் எமோஜியை கமெண்ட் பாக்ஸில் போட்டார்.
மேலும், இது காமெடியாக இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன் ஆனால் தயவு செய்து என்னை டேக் செய்ய வேண்டாம். நன்றாக சிரித்தேன் என்றார்.