பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஷில்பா செட்டி. 46 வயதான ஷில்பா செட்டி தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். 2009ல் தொழிலதிபரான ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து 3 குழந்தைகளை பெற்றெடுத்தார்.
தற்போது பாலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் செய்தி நடிக்க ஆடிஷன் வரும் நடிகைகளை நிர்வாணமாக நடிக்க வற்புறுத்தியதாக செய்திகள் பரவியது. அவர்களை கட்டாயப்படுத்தி ஆபாச படங்களில் நடிக்க வைத்து அதை தனது சொந்தமான செயலி மூலம் பதிவேற்றம் செய்து அதைப் பார்க்க லட்சக்கணக்கில் பணம் வசூலித்து ஒரு நாளைக்கு 6 முதல் 8 லட்சம் வரை சம்பாதித்துள்ளார்.
சமீபத்தில் பல நடிகைகள் அவர் பற்றிய தகவல்களை புகார் மூலம் கொடுத்தனர். இதனால் நடிகை ஷில்பா செட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை சில தினங்களுக்கு முன் போலிசார் கைது செய்தனர். இதுகுறித்து ஷில்பா செட்டி மெளனம் சாதிப்பதாகவும் கணவர் செய்த செயல்கள் அவருக்கு தெரியாமல் நடந்ததா? இல்லையா என்ற கோணத்தில் ஷில்பா செட்டியை விசாரித்து வருகிறார்கள்.