மொட்டை மாடியில் சோலோவாக கிரிக்கெட்.! நடிகை கீர்த்தி சுரேஷ்….

தெலுங்கு, தமிழ், மலையாளம் என்று தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது இவரது நடிப்பில் தற்போது ரஜினியின் அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.

அத்துடன், மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்து இருக்கின்ற மரைக்காயர் என்ற திரைப்படம் எப்போது வெளியாகும் என கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது புகைப்படங்கள் மற்றும் வாழ்வில் நடக்கும் அப்டேட்டை எப்போதும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவது வழக்கம். சமீபத்தில் இவர் மோகன் லாலுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது வைரலானது.

இந்த நிலையில், ஊடரங்கால் வீட்டில் ஓய்வெடுக்கும் கீர்த்தி சுரேஷ் மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாடுகின்ற வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார்.