அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்டு ட்ரம்ப் இன் அறிவிப்பு

அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்டு ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில் முககவசம் அணியவும், தடுப்பூசி போட்டுக்கொள்வதிலும் முரண்பட்ட கருத்துக்களை கொண்டிருந்த ட்ரம்ப், இப்போது, கொரோனா தடுப்பூசியை அமெரிக்கர்கள் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், அதேசமயம் அதை போட்டுக்கொள்வதா வேண்டாமா என்னும் முடிவில், மக்களுக்கு இருக்கும் தனி மனித சுதந்திரத்தை 100 சதவீதம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.