யாழில் தற்கொலை செய்துகொண்ட இளைஞன்: வெளியான தகவல்!

யாழில் அவமானம் தாங்க முடியாமல் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

புறா வளர்ப்பில் இளைஞர்களிற்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, இளைஞர் ஒருவரை பெண்கள் பிடித்து தாக்கி, முகத்தில் மிளகாய்த்தூள் வீசியுள்ளனர்.

அத்துடன் அதனை , காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதால் அவமானத்தால் அந்த இளைஞன் தற்கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியை சேர்ந்த புவனேந்திரராசா சுகந்தன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.