கடந்த வாரம் 69 ஆயிரம் கொரோனா உயிரிழப்புகள் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ளன. கொரோனா புதிய பாதிப்புகள், 8 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் மொத்த பாதிப்பு 19 கோடியே 56 லட்சத்தை தாண்டி விட்டது.
இதேரீதியில் சென்றால், இன்னும் 2 வாரங்களில் 20 கோடியை மிஞ்சிவிடும். அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் புதிய பாதிப்பு அதிகமாக இருக்கிறது.