ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் ஜப்பானில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகைகள் நயன்தாரா, நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும், நடிகர் யோகி பாபு, ஸ்ரீமான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சும்மா கிழி என்ற தொடக்க பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகளை சந்தோஷ் சிவன் மேற்கொண்டார்.
இந்த திரைப்படம் கடந்த 2020ம் ஆண்டு பொங்கலன்று வெளியான நிலையில், மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திரையரங்குகள் மூடப்பட்டது. உலகம் முழுவதும் ஊரடங்கு நடவடிக்கை தொடர்ந்ததால் எதிர்பார்த்த நாளில் தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
Darbar in japan. Rajini sir will always remain a magic !! pic.twitter.com/5hIEKNk7rA
— Prashanth Rangaswamy (@itisprashanth) July 28, 2021
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜப்பானிலும் ரசிகர்கள் உள்ளனர். அவருக்கு அங்கு ரசிகர் மன்றமும் தொடங்கி இருக்கிறார்கள். முத்து படத்தை பார்த்த பிறகே ஜப்பானியர்கள் ரஜினி ரசிகர்களாக மாறிவிட்டனர். ரஜினியின் புதிய படங்கள் வெளியாகும் பொது எல்லாம் சென்னனை வந்து படத்தை பார்த்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். பாபா ரிலீசான போது படத்தில் ரஜினி தலை பாகை அணிந்து இருந்தது போன்று தலைப்பாகை அனைத்து வந்து படத்தை பார்த்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் தர்பார் திரைப்படத்தை தற்போது மொழி மாற்றம் செய்து ஜப்பானில் வெளியிட்டுள்ளனர். இந்த படம் திரையிடபட்ட தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக அங்கு ஓடிக்கொண்டு இருக்கிறது. ஜப்பானில் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து படத்தை பார்கிறார்கள். நல்ல வசூலும் குவித்து வருகிறது. மேலும் தர்பார் திரைப்படத்தை ஐப்பானில் உள்ள சிறிய நகரங்களான கியோட்டோ, நகோயா , நிகிட்டாவில் திரையிடப்பட்டு உள்ளது.
இந்த திரைப்படம் ரூ.25 கோடியை ஒரே வாரத்தில் வசூல் செய்துள்ள நிலையில், இதனை ரஜினி ரசிகர்கள் #Darbarblockbusterinjapan என்ற ஹேஷ்டேக்கில் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.